முத்தரையர் மணிமண்டபத்தை திறக்கக்கோரி கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு

முத்தரையர் மணிமண்டபத்தை திறக்கக்கோரி கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2023-05-12 19:29 GMT

திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் நேற்று மாலை கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், "திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கடந்த ஆண்டு முத்தரையர் சதயவிழாவுக்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆகவே வருகிற 23-ந் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவுக்கு முன்னதாக மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்