வேலூரில் பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமித்ஷா பங்கேற்பு
வேலூரில் பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை மத்திய மந்திரி அமித்ஷா சந்திக்கிறார். தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, சீனிவாசன், பி.ஆர்.ராஜன், பிரித்தா ரெட்டி, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரை மத்திய மந்திரி அமித்ஷா சந்திக்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று வேலூரில் பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .