அரிவாளை காட்டி மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது

அரிவாளை காட்டி மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது

Update: 2023-05-28 19:15 GMT

அய்யம்பேட்டை அருகே வடக்கு மாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). இவர் பா.ஜ.க.வின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரை அரிவாளை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்