பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்..!
பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணாமாக டெல்லி சென்று இருந்தார். அங்கே மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு தான் கவர்னர் ரவி தமிழ்நாடு திரும்பினார். கவர்னர் தமிழ்நாடு திரும்பிய சில மணி நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைபயணம் ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி சென்னையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைக்க உள்துறை மந்திரி அமித்ஷா வர உள்ள நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லி சென்றதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.