செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய பா.ஜனதாவினர்

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமர் மோடியின் படத்தை பா.ஜனதாவினர் ஒட்டினர்.

Update: 2022-07-27 18:51 GMT

சர்வதேச அளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூலம் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனால் பிரதமரின் புகைப்படத்தை பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று எடுத்து வந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் அருகே பி.எல்.ஏ. ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பர பதாகைகளில் ஒட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்