தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளரை நியமித்தது பாஜக தலைமை

அரவிந்த் மேனனை தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது.

Update: 2024-01-27 08:19 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளை மறைமுகமாக அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளரை பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது. பாஜக தேசிய செயலாளர்  அரவிந்த் மேனனை தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக அக்கட்சி நியமித்துள்ளது. புதுவைக்கு நிர்மல் குமார் சுரானாவை பாஜக நியமனம் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்