தீட்சிதர்களின் சட்ட போராட்டத்துக்கு பா.ஜ.க. துணை நிற்கும்
தீட்சிதர்களின் சட்ட போராட்டத்துக்கு பா.ஜ.க. துணை நிற்கும் என்று வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் கூறினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஷ்வத்தாமன் நேரில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறுகையில் நடராஜர் கோவிலை அரசு கைப்பற்ற ஒரு காலும் பா.ஜ.க. அனுமதிக்காது. தமிழகத்தில் அறநிலையத்துறையை விரட்டியடிக்கும் வரை பா.ஜ.க. போராட்டம் தொடரும் மேலும், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அறநிலையத்துறை தேவையில்லை என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். கனகசபை மீது அத்துமீறி போலீசார், அறநிலையத்துறையினர் ஏறிய சம்பவம் குறித்து தீட்சிதர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, தீட்சிதர்கள் எந்தவித சட்ட போராட்டத்தை முன் எடுத்தாலும் அதற்கு பா.ஜ.க. துணை நிற்கும் என்றார் அவர். அப்போது அவருடன், பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில நிர்வாகி ஜி.பாலசுப்பிரமணியன், ஆன்மிக பிரிவு ஜெயகோபால், மேற்குமாவட்ட விவசாய அணி தலைவர் சீனுசங்கர், சிதம்பரம் நகர தலைவர் வக்கீல் சத்திய மூர்த்தி, வக்கீல் முகுந்தன், விஸ்வ ஹிந்து பரிஷத் ஜோதி, குருவாயூரப்பன், நிர்வாகிகள் சதீஷ், பரத், வடமலை, பகிரதன் உள்பட பலர் உடனிருந்தனர்.