பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம்
முதுகுளத்தூரில் பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் முதுகுளத்தூர் ஆற்றுப்பழம் அருகே உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.பி.கணபதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கலந்துகொண்டு தேர்தல் பணி குறித்து பேசினார். இ்தில் பெருங்கோட்ட அமைப்பு பொறுப்பாளர் பாலன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாவட்ட பொது செயலாளர் ஆத்ம கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.