ராஜ்யசபா எம்.பி.,கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தி ;கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க கண்டனம்
ராஜ்யசபா எம்.பி.,கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தி ;கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி- பா.ஜ.க கண்டனம்
சென்னை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசும் போது
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது.
எதிர்க்கட்சி என்ற நிலையை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கொள்கைகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை மத்திய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இத்தேர்வில், நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.
இதனால் வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது மத்திய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறி இருந்தார்.
இதற்கு தனியார் டிவி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறும் போது
ராஜ்யசபா எம்.பி.,பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளார்; கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பொன்னையன் முயற்சி செய்கிறார்.
பா.ஜ.க தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடும் கட்சி; காவிரி பிரச்சினைக்காக கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவரும் அண்ணாமலை ஆவார் என கூறினார்.
இதுகுறித்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில்
"பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம்.பாஜகவை முறியடிப்போம்" - அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் அதிமுக மற்றும் பாஜக இடையே எப்பொழுதும் நட்பு உறவை பேணி வருகிறோம். இப்போது உங்களை தூண்டியது யார்? அதாவது திமுகவுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா? எம்.ஜி.ஆருக்கும், ஜெ.ஜெ. அம்மாவுக்கும் எதிராக செல்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.