போகர் சன்னதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தியானம்
பழனி முருகன் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தியானம் செய்தார்.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கடந்த 3 நாட்கள் பழனியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக காலையில் அவர், பழனி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதற்காக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து போகர் சன்னதிக்கும் சென்று சிறிது நேரம் தியானம் செய்து வழிபட்டார். பின்னர் அங்கிருந்து கீழே இறங்கிய அவர் பயிற்சி முகாமிற்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் வந்தனர்.