பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது

Update: 2022-06-17 19:41 GMT

கபிஸ்தலம்:

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது என கி.வீரமணி கூறினார்.

பெரியார் சிலை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் நேற்று பெரியார் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பெரியார் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் அய்யனார், மாவட்ட தலைவர் அமர்சிங், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, பகுத்தறிவு கழக மாவட்ட தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பலவீனமாகி வருகிறது

பின்னர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்கிற பிரச்சினை வெடித்துள்ளது.

இப்போது அந்த கட்சியை இயக்குபவர்கள் கட்சியின் தொண்டர்களா? தலைவர்களா? என்பதை தாண்டி டெல்லியில் இருந்து அந்த கட்சி காவியால் இயக்கப்படுகிறது.

முதலில் அவர்கள், தங்களை அடமானத்தில் இருந்து மீட்டு, அப்புறம் இயக்கத்தை காப்பாற்றுவதற்கு என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் என்பவர் தனக்கு வகுக்கப்பட்ட அதிகார எல்லையை மீறக்கூடாது.

அரசியல் சட்டத்தில் கவர்னருக்கு தனி உரிமை கிடையாது. மாநில அரசை எதிர்த்து போட்டி அரசியல் நடத்த முடியாது. மாநில அரசு எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளையும் கவர்னர் பின்பற்ற வேண்டும். மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும். மாநில உரிமைகளுக்காக போராடுவதே திராவிட மாடலின் புதிய அம்சம். புதிய வெளிச்சம். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் வெற்றி பெறுவார்கள் என கூறியிருப்பது கனவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் , மாவட்ட தலைவர் வக்கீல் நிம்மதி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்