நாமக்கல்லில்பா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம்

Update:2023-09-07 00:30 IST

நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மற்ற திட்டங்களுக்கு செலவிடும் தமிழக அரசை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துகுமார், சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பிச்சை அளிக்கும் போராட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாவட்ட பா.ஜனதா தலைவர் சத்தியமூர்த்தி ரூ.1 பிச்சை அளித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மத்திய அரசு பட்டியல் இன மக்களின் வளர்ச்சிக்காக வழங்கும் நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது என குற்றம்சாட்டி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பட்டியல் அணி பொதுச்செயலாளர் கந்தசாமி, வர்த்தகர் பிரிவு துணைத்தலைவர் அகிலன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்