ஓட்டப்பிடாரம் அருகே பிறந்தநாள் விழா:வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை

ஓட்டப்பிடாரம் அருகே பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-04-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

வீரன்சுந்தரலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு கவர்னகிரியிலுள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் சுந்தரலிங்கனார்

வீரன் சுந்தரலிங்கனார் 253-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி மணிமண்டபத்திலுள்ள வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வீரன் சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ், வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் முருகன், செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பா.ஜ.க.

பா.ஜ.க சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாவட்ட தலைவர்கள் சித்தரங்கன், வெங்கடேசன் சென்னகேசவன், நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மற்றும் தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன்ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் வீரமணி, லிங்கராஜ், பிரபு, ஓன்றிய தலைவர் செந்தில்குமார், பிரபாகர், செல்வராஜ், நங்க முத்து, சரவணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க சார்பில் மாவட்டச் செயலாளர் தயாலிங்கம் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அலெக்ஸ் பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சலைவர் முத்துக்குமார், ஓட்டப்பிடாரம் நகரத் தலைவர் ராமேஷ் உட்படார் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்ராஜ் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ், தொகுதி தலைவர் வைகுண்ட மாரி, ஒன்றிய தலைவர் சுடலைமணி, ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு துணைத் தலைவர் விஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலதிபர் மாலை

வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கிராமத்தில் இருந்து வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் ஜோதியை ஏராளமான வாலிபர்கள் ஊர்வலமாக முப்பிலிவெட்டி, மேட்டூர், தெற்குபரும்பூர், வடக்கு பரும்பூர் ஓட்டப்பிடாரம் வழியாக மணிமண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்