வயல்வெளி பகுதிகளில் அரிவாள் மூக்கன் பறவைகள்

ராமநாதபுரம் காவனூர் அருகே வயல்வெளி பகுதிகளில் அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் குவிந்துள்ளன.

Update: 2022-12-14 18:45 GMT

காவனூர், 

ராமநாதபுரம் காவனூர் அருகே வயல்வெளி பகுதிகளில் அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் குவிந்துள்ளன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், சக்கரகோட்டை கண்மாய் உள்ளிட்ட 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதுபோல் நயினார்கோவில் யூனியனுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். வழக்கமாக இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இருந்து பறவைகள் வர தொடங்குவதோடு ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கும் அதிகமான பறவைகள் வரவில்லை என்று கூறப்படுகின்றது.

வயலில் குவிந்தன

இதனிடையே ராமநாதபுரம் நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ள காவனூர் மற்றும் குளத்தூருக்கும் இடைப்பட்ட கண்மாய் கரையை ஒட்டிய வயல்வெளி பகுதியில் ஏராளமான கருப்பு மற்றும் பிரவுன் கலரிலான அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் இரை தேடுவதற்காக குவிந்துள்ளன. இந்த பறவைகளோடு ஏராளமான வெள்ளை நிற கொக்குகளும் மற்றும் நீர் காகங்களும் இரைதேட குவிந்துள்ளன.

வழக்கமாக ஆண்டுதோறும் அரிவாள் மூக்கன் பறவைகள் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் அதிகமாக வரும் நிலையில் இந்த ஆண்டோ பறவைகள் சரணாலய பகுதிக்கு தஞ்சமடையாமல் காவனூர் அருகே உள்ள கண்மாக்கரையை ஒட்டியுள்ள வயல்களில் அதிக அளவிலான பறவைகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்