இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

வடக்கு விஜயநாராயணம் அருகே இருதரப்பினர் மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-02 19:25 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார்குடியிருப்பு வடக்குத்தெருவை சேர்ந்தவர் சாமிநாடார் மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 41). அதே ஊர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ் மகன் ஏசுராஜா (வயது 19). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 31-ந் தேதி முத்துக்கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஏசுராஜா மற்றும் திரவியம் நாடார் மகன் ராஜா, கனகராஜ் மகன் ஜேம்ஸ், சேர்மத்துரை மகன் சிமியோன், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அரவிந்த் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து அவரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது பதிலுக்கு முத்துக்கிருஷ்ணன் ஏசுராஜாவை தாக்கியதாகவும் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகராறில் காயமடைந்த முத்துக்கிருஷ்ணன், ஏசுராஜா ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்