இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்
தென்காசியில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் (வயது 45), சண்முகம் (35). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் இலஞ்சி- தென்காசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் அதே ஊரைச் சேர்ந்த சொர்ணகுமார் என்ற ரஞ்சித் குமார் (40) என்பவர் தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் திரும்பியது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சண்முகம், பெருமாள் ஆகியேர் கீேழ விழுந்தனர்.
இதுதொடர்பாக 2 பேரும், ரஞ்சித்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் குமார் தன்னிடம் வைத்திருந்த கத்தியை எடுத்து, 2 பேரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் இருந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 3 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் மீதும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.