கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. பிரமுகர் சைக்கிள் பயணம்; முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்

Update: 2023-06-11 19:30 GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரூர் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சேதுநாதன் அரூர் முதல் திருக்குவளை உள்ள கருணாநிதி இல்லம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். இந்த சைக்கிள் பயணம் தொடக்க விழா அரூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அரூர் பேரூராட்சி செயலாளர் முல்லை ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை.விசுவநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தரராசு, நெப்போலியன், தலைமை கழக பேச்சாளர் ராசு.தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமதுஅலி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சன்முகநதி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்