ஊத்தங்கரை
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் ரூ.7.90 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் அமானுல்லா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் கலைமகள் தீபக், கவுன்சிலர்கள் ஷாகிதாபேகம், கவிதா குப்புசாமி, ஸ்ரீராமன், கதிர்வேல், சுமித்ரா தவமணி, அபுபுன்னிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.