ஆரம்பப்பள்ளியில் ரூ.7½ லட்சத்தில் கட்டிடம் கட்ட பூமி பூஜை
எடையன்தாங்கள் கிராமத்தில் ஆரம்பப்பள்ளியில் ரூ.7½ லட்சத்தில் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சியில் எடையந்தாங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் புதிய சமையலறைக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன், கரடிகுப்பம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கனகராஜ், சமூக சேவகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரமேஷ், கோதண்டராமன், பிரபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.