பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டி நடந்தது.

Update: 2022-12-18 20:44 GMT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. போட்டிகளை நேற்று முன்தினம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் 80 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,200 பேர் கலந்து கொண்டனர். தடகள போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்பட 44 வகையான போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாலை சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்