பாரத மாதா தேர் பவனி
தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரத மாதா தேர் பவனி நடந்தது.
தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் 7-வது ஆண்டு பாரத மாதா தேர் பவனி நடந்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் அருகில் இருந்து தேர் பவனியை மாவட்ட பொதுச்செயலாளர் மாயலோகநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் செல்வபாண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். வேதபுரி ஸ்ரீசித்பவாநந்த ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி ஸம்விதாநந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட தலைவர் ராமராஜ், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த தேர் பவனி அல்லிநகரம், பெரியகுளம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை வழியாக வந்து பங்களாமேட்டில் நிறைவடைந்தது.