சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி நடைபெற்றது. சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை, எலுமிச்சை பழ மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.