பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-28 19:36 GMT

பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி எடுத்து வந்து பகவதி அம்மனுக்கு ஊற்றினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு ஸ்ரீம் சிவசித்தர் பிரசாதம் வழங்கினார். இதைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்