அம்பேத்கர் சிலை அருகே பா ம க கொடிக்கம்பம்

கச்சிராயப்பாளையத்தில் அம்பேத்கர் சிலை அருகே பா ம க கொடிக்கம்பம் சிலைவைப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

Update: 2022-10-07 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே பா.ம.க. கொடிக்கம்பம் அனுமதி இல்லாமல் நடப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அம்பேத்கர் சிலை வைப்பு குழு செயலாளர் பாசறை பாலு, லோக்ஜன சக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர்ஆனந்த் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பிரியா உள்ளிட்ட போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பா.ம.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அம்பேத்கர் சிலை அருகில் நடப்பட்டுள்ள கொடிக்கம்பத்தை ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்குமாறு கூறினார்கள். இதற்கு பா.ம.க.வினர் ஒத்துக்கொண்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்