திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்-தோழி மாயம்
சிவகாசி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்-தோழி மாயமானார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்துள்ளார். அப்போது அவரும், அவருடன் படித்த மற்ெறாரு மாணவியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் அந்த தோழிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச்சென்ற 20 வயது பெண், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள், தோழியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு தோழியையும் காணவில்லை.
பின்னர், 20 வயது பெண்ணின் பெற்றோர், தனது மகள் தோழியுடன் காணாமல் போனது குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான 2 பெண்களையும் தேடிவருகிறார்கள்.