நொய்யல் பகுதியில் வெற்றிலை தேக்கம்
நொய்யல் பகுதியில் வெற்றிலை தேக்கம் அடைந்துள்ளது.
நொய்யல், மரவாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையானது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால் வெற்றிலை விலை போகாமல் தேக்கம் அடைந்துள்ளது. எனவே வெற்றிலை குளிர் சாதன கிடங்கை அமைத்து ெகாடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.