உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.

Update: 2022-07-03 18:02 GMT

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர்ந்த செய்துள்ளனர். பின்னர் விளைந்த வெற்றிலைகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறையில் உள்ள தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த வாரம் 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ 5-ஆயிரத்துக்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ 3 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை 3ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூர வெற்றிலை ரூ.1200 க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்