கிரிவலம் செல்ல உகந்த நேரம்; கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-03-04 17:41 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (திங்கட்கிழமை) காலை 5.08 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்