மதுரை மண்டலத்தில் சிறந்த என்.சி.சி. பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று
மதுரை மண்டலத்தில் சிறந்த என்.சி.சி. பயிற்சி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை துணை இயக்குனர் வழங்கினார்.
மதுரை மண்டலத்தில் சிறந்த என்.சி.சி. பயிற்சி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை துணை இயக்குனர் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான என்.சி.சி. பிரிவின் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கான துணை இயக்குனர் ஜெனரல் கமாேடார் அதுல் குமார் ரஸ்தோகி நேற்று மதுரை வந்தார். அவரை மதுரை என்.சி.சி. குழும கமாண்டர் அமித் குப்தா வரவேற்றார். பின்னர், மதுரை குழுமத்தின் கீழ் உள்ள 13 யூனிட்டுகளின் அதிகாரிகளையும், பயிற்சி ஆசிரியர்களையும் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, தால் சைனிக் முகாமில் நிர்வாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பின்னர், சிறந்த என்.சி.சி. மாணவ, மாணவிகள், பயிற்சியாளர்கள், ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் தமிழக அரசின் என்.சி.சி. துறை அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. என்.சி.சி. பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு மேன்மை சான்றிதழ் வழங்கப்பட்டது.
துணை இயக்குனர் ஆய்வு
முன்னதாக அவர் கடந்த 12-ந் தேதி முதல் ராஜபாளையம் மற்றும் விருதுநகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ராஜபாளையத்தில் உள்ள சாரதா அம்பாள் கோவில் மற்றும் லிங்கம்மாள் ராமராஜன் சாஸ்திர பிரதிஷ்டை ஆகியவற்றுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் அங்குள்ள பள்ளி, கல்லூரி என்.சி.சி. நிகழ்ச்சிகளிலும், விருதுநகரில் உள்ள கல்லூரிகளில் நடந்த என்.சி.சி. நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.