பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவிலில்1008 திருவிளக்கு பூஜை

பேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update:2023-08-02 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சங்கரநயினார்புரம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீகோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு ஏற்றி பக்திபாடல்களை பாடி சுவாமி, அம்பாளை வழிப்பட்டனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்