பெரியகுளம் கோர்ட்டு முன்புவக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பெரியகுளம் வக்கீல்கள் சங்கம் சார்பில், பெரியகுளம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்தின்படி, பெரியகுளம் வக்கீல்கள் சங்கம் சார்பில், பெரியகுளம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் அம்பாசங்கர் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பாலமுருகன், மாநில துணை செயலாளர் நாராயணசாமி, தேனி மாவட்ட வக்கீல் சங்க செயலாளர் பாலாஜி மற்றும் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய அளவில் இருந்து வரும் முப்பெரும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.