கலெக்டர் அலுவலகம் முன்புஅரசு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மருதராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அரசுத்துறைகளில் பழைய வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். வாகன பராமரிப்பு நிதி முழுமையாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வித் தகுதியின் அடிப்படையில் டிரைவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.