அந்தியூர் அருகே மலைத்தேனீக்கள் கொட்டி 10 பெண்கள் காயம்

அந்தியூர் அருகே மலைத்தேனீக்கள் கொட்டி 10 பெண்கள் காயம்

Update: 2023-05-19 21:07 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே பிரம்மதேசம் ஊராட்சியில் உள்ள ஒரு தோட்ட பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதன் அருகே உள்ள ஊஞ்ச மரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கலைத்துள்ளார். இதனால் மலைத்தேனீக்கள் கூட்டில் இருந்து பறந்தன. இதை பார்த்ததும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துகொண்டு ஓடினார்கள். அவர்களை மலைத்தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டின. இதில் 10 பெண்கள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்