நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்துக்கு கூடையில் மனுக்களை கொண்டு வந்த தொழிலாளி்
நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்துக்கு தொழிலாளி கூடையில் மனுக்களை ெகாண்டு வந்தார்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது தேனி அல்லிநகரத்தை சேர்ந்த அங்கனன் என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் தலையில் ஒரு கூடையை சுமந்து கொண்டு அந்த கூடை நிறைய மனுக்களை கொண்டு வந்தார். இதனால், அவரை மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
இதுகுறித்து அங்கனனிடம் கேட்டபோது, "கூலித்தொழிலாளியான எனக்கு அல்லிநகரத்தில் 10 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு வேறு ஒருவருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. எனது நிலத்தை அளவீடு செய்து எனக்கு பட்டா கொடுக்குமாறு 8 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், இதுவரை கொடுத்த மனுக்களை கூடையில் சுமந்து வந்து தற்போதும் மனு கொடுத்துள்ளேன்" என்றார்.