வாகனம் மோதி இறைச்சி கடைக்காரர் பலி

நெல்லையில் வாகனம் மோதி இறைச்சி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-13 21:11 GMT

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டியன் (வயது 55). இவர் என்.ஜி.ஓ. 'ஏ' காலனியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு முத்துபாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில்- நெல்லை மெயின் ரோட்டில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முத்துபாண்டியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முத்துபாண்டியனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டியன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Tags:    

மேலும் செய்திகள்