முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடியில் மாவட்ட முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-20 18:45 GMT

தூத்துக்குடியில் மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.டென்சிங் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநில செயலாளர் ஆர்.ரசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இந்திய சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 82-வது நினைவு நாள் கடைபிடிப்பது, வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டா, முடி திருத்தும் நிலையங்களுக்குமானிய விலை மின்சாரம் கொடுக்க கோரியும், சலூன் கடைக்கு உள்ள வரி வசூல் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 27-ந் தேதி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் நாகராஜ், கவுரவ தலைவர் சதாசிவம், பொருளாளர் வேல்முருகன், துணை செயலாளர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்