மதுக்கடையில் கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு

ராமநாதபுரம் அருகே மதுக்கடையில் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-19 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ஜெய்கணேஷ் (வயது42). இவர் கடந்த 14-ந் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையில் பொருத்தப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு கேமராவை சோதனை செய்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் கடையின் கதவை திறந்து திருட முயன்று முடியாததால் 3 கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஜெய்கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்