தொழில் முனைவோருக்கு வங்கி கடன்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு வங்கி கடனை கலெக்டர் லலிதா வழங்கினார்.

Update: 2022-11-10 18:45 GMT

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு வங்கி கடனை கலெக்டர் லலிதா வழங்கினார்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில், சீர்காழி ஒன்றியங்களில் உள்ள 94 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டு வருகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் ஊரக தொழில்முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கமாகும்.

நேர்காணல்

இதன் அடிப்படையில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லலிதா தலைமையில் இணை மானிய நிதி வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலமாக தகுதியான தொழில்முனைவோர்களுக்கு கலந்தாய்வு நேர்காணல் நடத்தப்பட்டது.அப்போது கலெக்டர் பேசியதாவது:- வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளில் தொழில்சார் சமூக வல்லுனர் மூலமாக தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலமாக வணிக திட்டம், தொழிலுக்கு ஏற்றவாறு சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இணை மானியநிதி வங்கி கடன்

இணை மானிய நிதி வங்கிகடன் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் தங்களுடைய ஊராட்சிகளில் உங்களை போன்று தொழில்முனைவோர்கள் இருக்கும் பட்சத்தில் திட்டத்தின் சேவைகளை எடுத்து கூறி தங்களை போன்று பயன்பெற ஊக்குவிக்க வேண்டும். இணை மானிய நிதி வங்கி கடன் பெறுபவர்கள் முறையாக தொழிலை தொடர்ந்து செய்து தவணை தவறாமல் கடனை திரும்ப செலுத்தி மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.பின்னர் இணை மானியநிதி வங்கிகடனுக்கான காசோலையினை தொழில்முனைவோர்களுக்கு வழங்கினார். இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் மைக்கேல்ராஜ், மேலையூர் கனரா வங்கி மேலாளர் வினோத்பாபு, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்