மாணவர்களுக்கு வங்கி தேர்வுக்கு பயிற்சி

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் மாணவர்களுக்கு வங்கி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-01-08 18:45 GMT

கோவில்பட்டி:

எஸ்.எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி அரங்கில் 3-ம் ஆண்டு மாணவர்- மாணவிகளுக்கான வங்கி தேர்வுக்கு பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். மாணவி ஆர். காயத்திரி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செல்வராஜ், பேராசிரியர் சவுரீஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் செல்வலட்சுமி, விஜய கோபாலன் ஆகியோர் வங்கிப் பணி தேர்வுக்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.. மாணவர் செண்பகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்