காதலை பெண் ஏற்காததால் வங்கி ஊழியர் தற்கொலை
காதலை பெண் ஏற்காததால் வங்கி ஊழியர் தற்கொலை செய்தார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர், சீனிவாசன். இவருடைய மகன் அருண்ராஜ் (வயது25). தனியார் வங்கி ஊழியரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண் அதனை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அருண்ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் போலீசார் அருண்ராஜின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.