படித்துறையை சீரமைக்க பந்தக்கால் முகூர்த்தம்
கும்பகோணம் பொற்றாமரை குளம் கோவில் படித்துறையை சீரமைக்க பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலின் பின்புறம் உள்ளது. இந்த குளத்தில் மாசி மக தெப்ப உற்சவம் மற்றும் மாசி தீர்த்தவாரியின் போது, பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த குளத்தின் 4 மூலைகளிலுள்ள மண்டபங்கள், குளத்தின் வடகரையிலுள்ள ஹேமரிஷி மண்டபம் மற்றும் 2 கரையிலுள்ள படிக்கட்டுக்கள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் படித்துறையை சீரமைக்க இந்து சமய அறநிலைதுறை சார்பில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஹேமரிஷி மண்டபத்துக்கு குடமுழுக்கு நடத்த பாலாலய திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.