மழையால் வாழைகள் நாசம்

சுரண்டை அருகே மழையால் வாழைகள் நாசமானது.;

Update:2023-03-26 00:15 IST

சுரண்டை:

சுரண்டை அருகே வீராணம், வீரகேரளம்புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழையினால் வீராணத்தை அடுத்துள்ள ஏந்தலூர் பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்து நாசமானது.

அதாவது அந்த ஊரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டியன், வையாழிகண்ணு, தங்கதுரை, கருத்தபாண்டி ஆகியோர் பயிர் செய்திருந்த சுமார் 6,000-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்