கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஜனாதிபதி திரவுபதி இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு வந்தார்.

Update: 2023-03-17 19:55 GMT

ஜனாதிபதி திரவுபதி இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு வந்தார்.

ஜனாதிபதி வருகை

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். தொடர்ந்து தனிப்படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அங்கு சிறிது நேரம் கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையொட்டி கன்னியாகுமரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதி முழுவதும் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று கடலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகு போக்குவரத்து ரத்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதையொட்டி நேற்று காலை 11 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், படகுதுறைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும், நேற்று காலையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகம் வரை உள்ள சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது சுமார் ½ மணிநேரம் அந்த சாலையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒத்திகை நிறைவடைந்ததும் சாலையில் பொதுமக்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஜனாதிபதி வருகையைெயாட்டி இன்று கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வந்து செல்லும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையையொட்டி உள்ள கடைகள், சன்னதித்தெரு, படகுத்துறைக்கு செல்லும் சாலையில் உள்ள கடைகள், அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகம் செல்லும் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று மதியம் 2 மணி வரை அடைக்க போலீசார் ஒலிப்பெருக்கு மூலம் அறிவித்துள்ளனர்.

கவர்னர் வருகை

ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வந்தார். அவரை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் ெசய்ய சென்றார். இதைெயாட்டி ேகாவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரி நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்