பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடைவிதித்து பொன்னேரி சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி பகுதியில் அமைந்துள்ளது நடுவூர்மாதாகுப்பம் மீனவ கிராமம். இங்குள்ள மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் பாடு அமைத்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்த பாடு அமைப்பதில் இரு பிரிவுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மோதல் போக்காக மாறி மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் இருதரப்புக்கு இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் தீர்வு கிடைக்காமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் பாடுகளில் மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி பொன்னேரி மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடைக்கோரி சப்-கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.