சீதளா மாரியம்மன் கோவிலில் பால்குட விழா
தேரழுந்தூர் சீதளா மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே தேரழுந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சி ஏரிமேட்டுத்தெருவில் அருள்மிகு சீதளா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.