கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.

Update: 2022-08-20 18:58 GMT

களக்காடு

களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளம் ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி சிறுவர்-சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோலாட்டம் நிகழ்ச்சி நடத்தினர். அதனைதொடர்ந்து இரவில் உறியடி, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னதாக அழகிய மணவாள பெருமாளுக்கும், கிருஷ்ணர் உள்பட பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்