பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம்

விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டியாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக உற்சவ திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2023-03-05 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டியாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக உற்சவ திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பாலசுப்பிரமணிய சுவாமி

விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டியாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக உற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது.

விழாவின் 6-ம் நாளான கடந்த 2-ம் தேதி இரவு 12 மணிக்கு கழுவேற்றம் நடந்தது. 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

வடம் பிடித்து இழுத்தனர்

கோவில் குமரெட்டியாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளை சுற்றி நிலையை வந்தடைந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்