பரிமள ரெங்கநாதர் கோவிலில் பாலாலயம்

திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பாலாலயம்

Update: 2023-09-04 18:45 GMT


மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கு கரையில் 108 திவ்ய தேசங்களில் 22-வது தலமாகவும், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றாகவும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட, சந்திர சாப விமோசன தலமான இக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பின், தற்போது மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு நேற்று கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. இதையொட்டி, கோவில் பிரகாரத்தில் 6 யாக குண்டங்களில் தீ வளர்க்கப்பட்டு, 8 கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து கோவில் கருவறைக்குள் கடங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கோவில் வாசலில் முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்