விஷம் குடித்து பேக்கரி உரிமையாளர் தற்கொலை
விஷம் குடித்து பேக்கரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
லாலாபேட்டை அருகே உள்ள வைத்தியநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் குளித்தலையில் ெசாந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ராமலிங்கம் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தற்கொலை லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.