பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக போலீசார்

பெரியகுளம் தென்கரையில் பெண் போலீசுக்கு சக போலீசார் வளைகாப்பு நடத்தினர்.

Update: 2023-04-08 20:45 GMT

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அருள். டிராக்டர் டிரைவர். இவரது மனைவி பாரதி (வயது 27). இவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கர்ப்பிணியான பாரதிக்கு, சக போலீசார் தங்களது ஏற்பாட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, பாரதியின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று தென்கரை போலீஸ் நிலையத்தில் நடந்தது.

இதில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சி, அன்னமயில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தண்டபாணி, தீபக், ஜான், செல்லத்துரை மற்றும் போலீசார் கலந்துகொண்டு, பாரதிக்கு வளையல் அணிவித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் 7 வகை சாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்